மாமியார் மீது கொண்ட ஆத்திரத்தால் அருவருப்பான செயலை செய்த மருமகன்..!

ஆந்திர மாநிலம் விசாகபட்டினத்தில் மருமகன் மாமியார் மீதான ஆத்திரத்தில் மொபைல் எண்ணை ஆபாச தளத்தில் பதிவிட்டுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஆந்திரபிரதேசம் விசாகப்பட்டினத்தில் தனியார் நிறுவனத்தில் உதவி மேலாளராக வேலை பார்த்து வந்தவரை சைபர் கிரைம் பொலிசார் கைது செய்துள்ளனர்.

கைதான நபருக்கு கடந்த 2017ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றுள்ளது. ஆனாலும் திருமணம் ஆனது முதலே தன் மனைவி மற்றும் மாமியாருடன் அடிக்கடி சண்டை போட்டு வந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில், திடீரென்று தனது மாமியார் மீது கோபம் அதிகமான நிலையில், அந்த நபர் ஒரு அருவருப்பான செயலை செய்துள்ளார். தனது மாமியாரின் மொபைல் எண்ணை ஆபாச தளத்தில் பகிர்ந்துள்ளார்.

இதன் காரணமாக, கைதான நபரின் 59 வயது மாமியாருக்கு அடிக்கடி அழைப்புகள் வந்துள்ளது. அப்போது, எதிர்புறம் இருந்தவர்கள் ஆபாசமாக பேசியுள்ளனர். மேலும், அடிக்கடி போன் செய்து தொல்லை செய்துள்ளனர்.

இதனால், அதிர்ச்சி அடைந்த அந்தப் பெண், சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் விசாரணை நடத்திய போலீசார், பெண்ணின் மருமகன் தான் ஆபாச தளத்தில் மொபைல் எண்ணை பதிவு செய்துள்ளார் என்பதை கண்டறிந்தனர்.

இதனை அடுத்து, அவரை கைது செய்து மூன்று பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.