தற்கொலைப்படை தாக்குதல்.! 17 பேர் உடல் சிதறி பரிதாப பலி.!

இந்த உலகம் முழுவதும் உள்ள மக்கள் பல்வேறு விதமான மரணத்தை தழுவி வரும் நிலையில்., பயங்கரவாதிகளால் மக்கள் கூட்டம் கூட்டமானாக படுகொலை செய்யப்படும் சம்பவமானது பெரும் அதிர்வலையை ஏற்படுத்துகிறது.

சிரிய நாட்டில் ரம்ஜான் பண்டிகை கொண்டாடுவதற்கு தயாரான மக்கள்., அங்குள்ள வணிக வளாகங்கள் மற்றும் சந்தைகளில் விற்பனை செய்யப்படும் பொருட்களில் வாங்குவதற்கு தொடர்ந்து கூட்டம் கூட்டமாக குவிந்த வண்ணம் உள்ளனர்.

இந்த சமயத்தில் அங்குள்ள அலெப்போ மாகாணத்தில் இருக்கும் அஜஸ் நகரில் உள்ள மசூதியில் நேற்று மாலை நேரத்தில் நோம்பு திறக்கப்படவே., நூற்றுக்கணக்கான மக்கள் அங்கு காத்துகொண்டு இருந்தனர். இந்த நேரத்தில் அங்குள்ள சந்தையில் மக்கள் புதிய ஆடைகளை எடுக்க குவிந்த வண்ணம் இருந்தனர்.

அங்குள்ள மக்கள் யாரும் எதிர்பாராத நேரத்தில் பயங்கர சத்தத்துடன் கார் ஒன்று வெடித்து சிதறியது. இந்த சம்பவத்தில் அங்கிருந்த குழந்தைகள் உட்பட சுமார் 17 பேர் உடல் சிதறி பரிதாபமாக பலியாகினர். இதில் பலரது நிலைமை கவலைக்கிடமலாக உள்ளதால்., மக்கள் கடும் அச்சத்தில் உள்ளனர்.

தாக்கத்தால் நடத்தப்பட்ட கடைகள் அனைத்தும் தீக்கு இறையானதை அடுத்து அங்குள்ள பகுதிகள் அனைத்தும் மயானமாக மாறியது. இது குறித்து அந்நாட்டின் காவல் துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவமானது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.