இளையராஜாவிற்கு ஏற்பட்ட கோபம்… காலில் விழுந்த காவலர்! காணொளியாக வெளியான உண்மை முகம்

இசைஞானி என்று அனைவராலும் புகழப்படும் இளையராஜாவின் இசைக்கு அடிமை ஆகாதவர்கள் இல்லை என்றே கூறலாம். ஆனால் சமீப காலமாக இவரது பேச்சுகள் பல்வேறு சர்ச்சைகளுக்கு ஆளாகி வருகின்றன.

தனது இசையமைத்த பாடல்களுக்கு ராயல்டி விஷயத்தில் கறார் காட்டியது, எஸ்.பி.பி உடன் ஏற்பட்ட மனக்கசப்பு, பத்திரிகையாளர்களிடம் தேவையற்ற கேள்விகளை எழுப்பியது, 96 படத்தில் தனது பாடலை பயன்படுத்திய இசையமைப்பாளரை ஆண்மை இல்லாதவர் என்று விமர்சனம் செய்தது என பட்டியல் நீண்டு கொண்டே செல்கிறது.

இந்நிலையில் இசையமைப்பாளர் இளையராஜாவின் பிறந்த நாள் நேற்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி இசை நிகழ்ச்சி ஒன்றிற்கு ஏற்பாடு செய்யப்பட்டது. அதிலும் ஒருவித சர்ச்சை ஏற்பட்டு, அந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

அதாவது, இசை நிகழ்ச்சி நடந்து கொண்டிருந்த போது, பாதுகாவலர் ஒருவர் திடீரென மேடைக்கு வந்தார். அதைப் பார்த்த இளையராஜா கோபமடைந்தார். அவரை அழைத்து இப்படி செய்யலாமா என்று கேள்வி எழுப்பினார். அதற்கு, தாகமாக இருக்கிறது என்றார்கள்.

அதனால் தண்ணீர் கொண்டு வந்தேன் என்று பாதுகாவலர் பதில் அளித்துள்ளார். ஆனால் அவருடைய விளக்கத்தை ஏற்காமல் பேசிய இளையராஜாவின் கால்களில் விழுந்து, பாதுகாவலர் மன்னிப்பு கேட்டு, பின்னர் அங்கிருந்து கீழே சென்றுவிட்டார்.

தொடர்ந்து பேசிய இளையராஜா, ரூ.500, ரூ.1000 டிக்கெட் வாங்கியவர்கள் ஏன் ரூ.10,000 டிக்கெட் வாங்கியவர்களின் இருக்கைகளில் அமர்ந்திருக்கிறீர்கள். குறிப்பிட்ட தொகை கொடுத்து டிக்கெட் வாங்கியவர்கள் என்னை திட்ட மாட்டார்களா? கட்டணத்திற்கான இருக்கைகளில் அமர்வது தானே சரி என இளையராஜா கோபப்பட்டுள்ளார். குறித்த காட்சி சமூகவலைதளங்களில் தீயாய் பரவி வருவதோடு மீண்டும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.