இந்திய கிரிக்கெட் அணி தற்போது உலகக்கோப்பையில் பங்கேற்று வருகிறது. இந்த போட்டி தொடருக்கு பிறகு இந்திய அணி வெஸ்ட் இண்டீஸ்க்கு செல்ல உள்ளது. அதனையடுத்து இந்தியா திரும்பும் இந்திய அணிக்கு, தொடர்ச்சியாக இந்தியாவில் கிரிக்கெட் போட்டிகள் நடக்க உள்ளது.
முதலில் செப்டம்பர் மாதத்தில் 15 ஆம் தேதி முதல் அக்டோபர் 23 ஆம் தேதி வரை, தென்னாப்பிரிக்க அணியுடன் இந்திய அணி 3 இருபது ஓவர் போட்டிகள், 3 டெஸ்ட் போட்டிகள் ஆட உள்ளது. அடுத்த படியாக இந்தியா வரும் வங்கதேச அணியுடன் நவம்பர் 3 ஆம் தேதி முதல் 26 ஆம் தேதி வரையில் இந்தியா 3 இருபது ஓவர் போட்டிகள், 2 டெஸ்ட் போட்டிகள் ஆட உள்ளது.
அதன்பிறகு இந்தியா வரும் வெஸ்ட் இண்டீஸ் அணி டிசம்பர் 6 ஆம் தேதி முதல் 22 ஆம் தேதி வரையில், 3 இருபது ஓவர் போட்டிகள், 3 ஒருநாள் போட்டிகளில் ஆட உள்ளது. அதன்பிறகு இந்தியா வரும் ஜிம்பாபே அணியுடன் ஜனவரி 5 ஆம் தேதி முதல் 10 ஆம் தேதி வரையில், 3 இருபது ஓவர் போட்டிகள் மட்டும் ஆட உள்ளது.
அதன்பிறகு இந்தியா வரும் ஆஸ்திரேலிய அணியுடன் ஜனவரி 14 ஆம் தேதி முதல் 19 ஆம் தேதி வரையில் 3 ஒருநாள் போட்டிகளில் ஆட உள்ளது. அதன்பிறகு இந்தியா வரும் தென்னாபிரிக்க அணியுடன் மார்ச் 12 ஆம் தேதி முதல் 18 ஆம் தேதி வரையில் 3 ஒருநாள் போட்டிகளில் ஆட உள்ளது. இந்திய அணிக்கு தொடர்ச்சியாக போட்டிகள் இருப்பதால் இந்திய கிரிக்கெட் ரசிகர்களுக்கு கொண்டாட்டம் தான்.