தமிழகத்தில் இந்தி? அழகிய தீர்வு என! ஏ.ஆர்.ரஹ்மான் வெளியிட்ட தகவல்!!

தேசிய கல்விக் கொள்கை தொடர்பான வரைவு அறிக்கையை கஸ்தூரி ரங்கன் குழு மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறையிடம் ஒப்படைத்தது. அதில் இந்தி மொழி பேசாத மாநிலங்களில் உள்ள அனைத்துப் பள்ளிகளிலும் நடுநிலை வகுப்புகளில் மும்மொழிக் கொள்கையை கடைபிடிக்க வேண்டும், மேலும் அந்த பள்ளிகளில் மூன்றாவது மொழியாக இந்தியை கட்டாயம் பயில வேண்டும் என மத்திய அரசு வெளியிட்டுருந்த வரைவு புதிய கல்விக் கொள்கையில் குறிப்பிடப்பட்டுயிருக்கிறது.

மத்திய அரசு வெளியிட்ட புதிய கல்வி கொள்கைக்கு தமிழகதில் உள்ள அரசியல் கட்சி தலைவர்கள் பலரும் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர், சமூக வலைதளங்களிலும் என உலக அளவில் ட்ரெண்ட் செய்யப்பட்டு பெரும் எதிர்ப்பு எழுந்தது.

இதனையடுத்து, கஸ்தூரி ரங்கன் குழு அளித்த தேசிய கல்விக் கொள்கை தொடர்பான வரைவு அறிக்கையை திருத்தம் செய்து மத்திய அரசு வெளியிட்டுள்ளது. அதில் இந்தி பேசாத மற்ற மாநிலங்களில்மும்மொழிக் கொள்கை என்பது கட்டாயமில்லை, மூன்றாவது மொழி தேர்வு செய்வது மாணவர்களின் விருப்பம் என மத்திய அரசு அறிவித்துள்ளது.

இந்நிலையில் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் தனது டிவிட்டர், மத்திய அரசின் முடிவு அழகிய தீர்வு என்று பதிவிட்டுள்ளார். அத்துடன் ஒரு ரோஜாப்பூவின் படத்தையும், தேசியக் கொடியின் படத்தையும் அவர் பதிவிட்டுள்ளார்.