ரோஜாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுக்கப்போகும் ஜெகன்மோகன் ரெட்டி.!

ஆந்திராவின் சித்தூர் மாவட்டத்தில் உள்ள நகரி சட்டசபை தொகுதியில் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் வேட்பாளராக நடிகை ரோஜா போட்டியிட்டார்.

இந்த தேர்தலில் ரோஜாவை எதிர்த்து போட்டியிட்ட தெலுங்கு தேசம் கட்சி பானு பிரகாஷை 2,681 வித்தியாசத்தில் வெற்றி பெற்றார் ரோஜா. ரோஜா அரசியல் வந்த தொடக்கத்தில் தெலுங்கு தேசம் கட்சியில் இருந்தார். அங்கு உரிய மரியாதை கிடைக்காததால் ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸுக்கு மாறினார்.

ஜெகன்மோகன் ரெட்டிக்காக பல போராட்டங்களை நடத்தினார். நடிகை ரோஜா பிரச்சாரம் செய்த தொகுதிகளில் 97% வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றுள்ளது. ரோஜாவின் பிரச்சாரத்தின் மூலம் அதிக வாக்குகள் வந்துள்ளது.

இதனால் ரோஜாவுக்கு அமைச்சர் பதிவு வழங்க வாய்ப்பு உள்ளது. அவர்களுக்கு மின்சாரத்துறை வழங்கப்பட இருப்பதாக செய்தி வெளியாகி உள்ளது. நாளை நடைபெறும் அமைச்சர்கள் பதவி ஏற்பு விழாவில் ரோஜா அமைச்சராக பதவி ஏற்க உள்ளார்.