மணிக்கு 237 கி.மீ வேகம்: கால்பந்து ஜாம்பவான் மரணத்தில் திடுக்கிடும் தகவல்!

உலக கால்பந்து ரசிகர்களை நடுங்க வைத்த அர்செனல் அணியின் முன்னாள் நட்சத்திர வீரரின் கார் விபத்து தொடர்பில் அதிர்ச்சி தகவல் வெளிவந்துள்ளது.

ஸ்பானிய கால்பந்து நட்சத்திரமான ஜோஸ் அண்டோனியோ ரையஸ் கார் விபத்தில் சிக்கி கொல்லப்பட்டது தொடர்பில் உலுக்கும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

விபத்து ஏற்படும் போது மணிக்கு 237 கி.மீ வேகத்தில் கால்பந்து நட்சத்திம் அண்டோனியோ ரையஸ் தமது காரை செலுத்தியிருந்ததாக முதற்கட்ட தகவல் தெரிவிக்கின்றது.

ரையஸ் சென்றிருந்த கார் அவரது கட்டுப்பாட்டை இழந்து விபத்தில் சிக்கியுள்ளது. சாலையில் இருந்து தூக்கி வீசப்பட்ட கார்,

அருகாமையில் உள்ள புதருக்குள் சென்று பதித்து, மொத்தமாக தீப்பிடித்துள்ளது.

ரையஸ் உடன் விபத்தின்போது மேலும் இருவர் இருந்ததாகவும், அதில் ஒருவர் கால்பந்து ஜாம்பவானின் 23 வயது உறவினர் எனவும் தெரியவந்துள்ளது.

ஸ்பெயின் நாட்டைச் சேர்ந்த 35 வயது ஜோஸ் அண்டோனியோ, ஆர்சனல், அட்லிடிகோ மேட்ரிட் மற்றும் ரியல் மாட்ரிட் அணிகளுக்காகவும் விளையாடிவுள்ளார்.

செவில்லா அணியின் தலைவராகவும் செயல்பட்டுள்ளார்.

பிரீமியர் லீக், லா லிகா உட்பட பல கிண்ணங்களை கைப்பற்றிய அணியில் ஜோஸ் அண்டோனியோ விளையாடிவுள்ளார்.

ரையசின் இறுதிச்சடங்குகள் நூற்றுக்கணக்கான அவரது ரசிகர்கள் மற்றும் குடும்பத்தார் முன்னிலையில் ஸ்பெயின் நாட்டில் உள்ள அவரது சொந்த கிராமத்தில் நடைபெற்றுள்ளது.

ரையஸிக்கு,Noelia Lopez என்ற பெண்மணியுடன் கடந்த ஜூன் 2017 ஆம் ஆண்டு திருமணமானது, இவர்களுக்கு மூன்று பிள்ளைகள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.