தாயாரையும் மகளையும் உறவுக்கு கட்டாயப்படுத்திய கனேடியர்: நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

கனடாவின் சாஸ்கடூன் நகரில் இணையதளம் மூலம் தாயார் ஒருவரையும் அவரது 11 வயது மகளையும் பாலியல் உறவுக்கு முயற்சி செய்த நபருக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

இந்த விவகாரத்தில் சிக்கியுள்ள Brendan Olynick என்பவருக்கு 16 மாதங்கள் சிறை தண்டனை விதித்து மாகாண நீதிமன்ற நீதிபதி சஞ்சீவ் ஆனந்த் தீர்ப்பு வழங்கியுள்ளார்.

மேலும் சிறையில் இருந்து பிரெண்டன் ஆலிநிக் விடுதலையான பின்னர் 3 ஆண்டு காலம் நன்னடத்தை சோதனைக்கு உட்படுத்தப்படுவார் எனவும் நீதிபதி சஞ்சீவ் ஆனந்த் சுட்டிக்காட்டியுள்ளார்.

கடந்த மார்ச் ஒன்றாம் திகதி சாஸ்கடூன் மாகாண நீதிமன்றத்தில் நடந்த விசாரணையில், 11 வயது சிறுமியை ஆபாச தொடுகைக்கு நிர்பந்தித்ததாக சுமத்தப்பட்ட குற்றச்சாட்டு நிரூபணமானது.

மேலும், ஆலிநிக் முன்வைத்த விளக்கங்கள் எதுவும் நீதிபதி சஞ்சீவ் ஆனந்த் ஏற்றுக்கொள்ளாத நிலையில்,

தாயாரை மட்டுமே தாம் உறவுக்கு அழைத்ததாகவும் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார். கடந்த 2017 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம், குறிப்பிட்ட இணையதளம் ஒன்றில், தாயார் மற்றும் அவரது மகளை தனியாக சந்திக்க விருப்பப்படுவதாக ஆலிநிக் விளம்பரம் செய்துள்ளார்.

இந்த விளம்பரம் ரகசிய பொலிஸ் அதிகாரி ஒருவரின் பார்வையில் படவே, அவர் பதில் அளித்து, ஆலிநிக்கை சிக்க வைத்துள்ளார்.