தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பு (சி.ஐ.டி.யு.) மாநில தலைவர் எஸ் எஸ் சுப்பிரமணியன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியவை, இந்த ஆண்டு மின் கட்டணத்தை உயர்த்த அரசு திட்டமிட்டுள்ளது.
30 சதவீதம் வரை மின் கட்டணம் உயர உள்ளது. இதனால் ரூபாய் 20,000 கோடி அளவுக்கு சாதாரண மக்கள் மீது மின்கட்டண உயர்வு திணிக்கப்பட உள்ளது. இதனால் சாதாரண மக்கள், விவசாயிகள் என அனைத்து தரப்பினரும் பாதிக்கப்படுவார்கள். நாடாளுமன்றத் தேர்தல் வராமல் இருந்திருந்தால் முன்னரே மின் கட்டணத்தை உயர்த்துவது குறித்து அறிவிப்பு அரசு வெளியிட்டு இருக்கும்.
தற்போது நாடாளுமன்றத் தேர்தல் நடந்து முடிந்து விட்டதால், மின்கட்டண உயர்வு குறித்து அரசு விரைவில் அறிவிப்பு வெளியிடும். பொதுவான மின் கட்டணத்தை அரசு உயர்த்தும் எண்ணம் இருந்தால், இது தொடர்பாக மின் வாரியம் ஒழுங்குமுறை ஆணையத்திடம் ஒப்புதல் பெற வேண்டும். ஆனால் தமிழ்நாடு மின் வாரியம், மின் வாரியம் ஒழுங்குமுறை ஆணையத்திடம் மின் கட்டணத்தை உயர்த்துவது குறித்து ஒப்புதல் பெறவில்லை என எங்களுக்கு தகவல் வந்துள்ளது.
மின் கட்டணத்தை ஒரு யூனிட்டுக்கு 30 சதவீதம் வரை உயர்த்த அரசு திட்டமிட்டுள்ளது. 30%, 47% என இரண்டு விதமாக மின் கட்டணத்தை உயர்த்த அரசு முடிவு செய்திருந்தது. ஆனால் தற்போது 30% என்பது உறுதியாகி உள்ளது என தெரிவித்தார்.