திரையரங்கை திருவிழாவாக மாற்றும் 2.0.! வெளியீடு தேதி அறிவிப்பு.!!

இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த நடிப்பில் வெளியான திரைப்படம் “2.0”. இந்த திரைப்படமானது கடந்த நவம்பர் மாதம் 29 ம் தேதியன்று உலகளவில் வெளியாகி அனைத்து தரப்பு மக்களிடமும் நல்ல வரவேற்பை பெற்றது.

இந்த திரைப்படத்தில் நடிகர் அக்சய்குமார்., நடிகை எமி ஜாக்சன் உள்ளிட்ட பல திரையுலக பிரபலங்கள் நடித்திருந்தனர். இந்த படம் முழுவதும் 3 டி தொழில்நுட்பத்துடன் பல கலைஞர்கள் பணியாற்றி எடுக்கப்பட்ட திரைப்படமாகும்.

இந்த திரைப்படத்திற்கு இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் அவர்கள் இசையமைத்திருந்தார். மேலும் இந்த படத்தை லைக்கா ப்ரொடக்ட்டின் தயாரித்து வழங்கியது. உலகம் முழுவதும் சுமார் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட திரையரங்கில் வெளியான இந்த திரைப்படம் வசூலில் தற்போது வரை ரூ.750 கோடி வசூல் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ரஜினிகாந்திற்கு சீனாவில் ரசிகர்கள் அதிகளவில் இருக்கிறார்கள் என்பதை அனைவரும் அறிவோம். அந்த வகையில்., 2.0 திரைப்படமானது சீன மொழியில் மொழிபெயர்க்கப்பட்டு வெளியீடு செய்ய திட்டமிடப்பட்டு., அதற்கான பணிகள் அனைத்தும் நடைபெற்று வந்த நிலையில்., வரும் 12 ஆம் தேதியன்று சீனாவில் உள்ள 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட திரையரங்குகளில் வெளியாக போவதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனையடுத்து ரஜினி ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.