ஸ்டாலின் ஆணையிட்டால் தீயிட்டு கொளுத்துவோம்! வைகோ ஆவேச பேச்சு!

மறைந்த தி.மு.க தலைவர் கருணாநிதியின் 96-வது பிறந்த நாள் விழா மற்றும் வாக்காளர்களுக்கு நன்றி அறிவிப்பு பொதுக்கூட்டம் சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின், மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியை சார்ந்த தமிழக காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் கே.எஸ் அழகிரி, ம.தி.மு.க பொதுசெயலாளர் வைகோ உள்ளிட்ட கூட்டணி கட்சி தலைவர்கள் ஓரே மேடையில் பங்கேற்றனர்.

கூட்டத்தில் பேசிய வைகோ, தமிழகத்தில் மக்களவை தேர்தலில்திராவிடக் கட்சிகளோடு மோதிய, பா.ஜ.க தோல்வியடைந்து மூக்கு உடைபட்டுள்ளது. கருணாநிதியின் மகன், மு.க.ஸ்டாலின் மக்களவை தேர்தலில் தமிழகத்தில் 40 தொகுதிகளை வென்றதன் மூலம் இந்தியாவின் மொத்தக் கவனத்தையும் ஈர்க்கும் அளவுக்கு திராவிட இயக்கத்தின் பெருமையை உயர்த்தியிருக்கிறார்.

இந்தியை திணிக்கும் வகையில் மத்திய அரசு கொண்டுவரவுள்ள கஸ்தூரி ரங்கன் அறிக்கையின் குறிப்பிட்ட பகுதியை ஸ்டாலின் ஆணையிட்டால் தீயிட்டுக் கொளுத்தத் தயாராக இருக்கிறோம். அரசியல்சாசனத்தையே தீயிட்டு கொளுத்தியவர்கள். கஸ்தூரி ரங்கன் அறிக்கையை தெருக்கு தெரு தீயிட்டு கொளுத்துவோம் என தெரிவித்தார்.