பாராளுமன்ற தேர்தலின் போது ராகுல் காந்தியின் குடியுரிமை மீது சந்தேகம் இருப்பதாக பாஜகவை சேர்ந்த மூத்த தலைவர்களில் ஒருவரான சுப்பிரமணியன் சாமி கேள்வி எழுப்பினார். இதையடுத்து கடந்த ஏப்ரல் மாதம் ராகுல் காந்தி இதுகுறித்து விளக்கமளிக்க வேண்டும் மென மத்திய உள்துறை அமைச்சகம் ராகுல் காந்திக்கு நோட்டீஸ் அனுப்பியது.
சுப்பிரமணிய சாமி மத்திய அரசுக்கு அனுப்பிய அறிக்கையில்,பிரிட்டனில் உள்ள நிறுவனம் ஒன்றின் இயக்குநராக உள்ள காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, அந்நிறுவனதில் உள்ள குறிப்பில் தான் பிறந்த தேதி ஜூன் 19, 1970 என்றும் தனது தேசியம் பிரிட்டிஷ் என குறிப்பிட்டுள்ளார் எனக் சுப்பிரமணிய சாமி கூறியிருந்தார்.
இதற்கு சர்ச்சைக்குரிய கேள்விக்கு ராகுலின் சகோதரி பிரியங்கா காந்தி மிகக் கடுமையான எதிர்ப்புத் தெரிவித்திருந்தார். தற்போது ஆர்டிஐ என்னும் தகவல் அறியும் உரிமைச் சட்டம் மூலம் மத்திய உள்துறை அமைச்சகம் ராகுலுக்கு அனுப்பிய நோட்டீஸ் விவரம் தேவை என ஒருவர் விண்ணப்பித்து இருந்தார். அதற்கான பதில் குறித்த கேள்விக்கு மத்திய உள்துறை அமைச்சகம், ஒவ்வொரு குடிமகனுக்கும் அனுப்பிய நோட்டீஸ் விவரம் குறித்த பதிவுகள் எல்லாம் நாங்கள் பராமரித்துக்கொண்டு இருக்க முடியாது என பதிலளித்துள்ளது.