குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான கீர்த்தி சுரேஷ், 2013ம் ஆண்டு கீதாஞ்சலி என்னும் மலையாள திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார்.
கீர்த்தி சுரேஷ் தமிழில் ரஜினி முருகன், தொடரி, ரெமோ மற்றும் தானா சேர்ந்த கூட்டம் போன்ற படங்களில் நடித்ததன் மூலம் ரசிகர்கள் மனதில் நீங்க இடம் பிடித்தார்.
இந்நிலையில் கீர்த்தி சுரேஷ் தற்போது பாலிவுட் படம் ஒன்றில் நடித்து வருகிறார். அஜய் தேவ்கனுடன் ஜோடியாக நடிக்கும் கீர்த்தி சுரேஷ் புது பட வாய்ப்புக்காக தனது உடல் எடையை குறைத்து ஸ்லிம் ஆகி உள்ளார். ஸ்லிம்மாக உள்ள கீர்த்தி, ஜிம்மில் இருந்து வெளியிட்ட புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளனர்.