அமைச்சு பதவியிலிருந்து விலகிய ரிசாத் பதியுதீனுக்கு எதிராக சமர்ப்பிக்கப்பட்டுள்ள நம்பிக்கையில்லா பிரேரணையை விசாரிக்க வேண்டிய அவசியம் இல்லை என நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ ராஜகருணா தெரிவித்துள்ளனர்.
நாட்டில் ஏற்பட்ட நெருக்கடியான சூழ்நிலையை அடுத்து அரசாங்கத்தில் அங்கம் வகித்த முஸ்லிம் அமைச்சர்கள், இராஜாங்க அமைச்சர்கள் மற்றும் பிரதி அமைச்சர்கள் சிலர் பதவியை ராஜினாமா செய்தனர்.
எனினும் அரசாங்கம் வலுவிழக்காமல் ஸ்திரமான நிலையில் இருப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ ராஜகருணா இந்த தகவலை ஊடகமொன்றுக்கு குறிப்பிட்டுள்ளளார்.
சமகால அரசாங்கத்தின் ஸ்திரத்தன்மையை காட்டும் நோக்கில் அரசாங்கத்திற்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணையை விரைவில் விவாதத்திக்கு எடுப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
ரவூப் ஹக்கீம், ரிசாத் பதியுதின், கபீர் ஹஷீம் மற்றும் அப்துல் ஹலீம் ஆகிய அமைச்சர்களும், பைசல் ஹாசீம், எச்.எம்.எம்.ஹாரிஸ், அமீர் அலி, அலி சஹீர் மௌலானா ஆகிய இராஜாங்க அமைச்சர்கள் மற்றும் பிரதி அமைச்சரான அப்துல்லா மஹரூப் ஆகியோர் நேற்று தங்கள் பதவிகளை இராஜினாமா செய்தனர்.
குற்றம் சுமத்தப்பட்டுள்ளவர்களுக்கு எதிராக விரைவில் விசாரணை மேற்கொண்டு பிரச்சினைகளை நிறைவு கொண்டு வருவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
குற்றவாளிகள் இருப்பின் அவர்களை கைது செய்து சட்டத்தை செயற்படுத்தவுள்ளோம். ஏனையவர்கள் விடுவிக்கப்படுவார்கள். அதுவரையிலான காலப்பகுதியில் வெற்றிடமாக உள்ள அமைச்சுகளை நடந்தி செல்வதற்கு வேறு சிலருக்கு பொறுப்பகளை வழங்க வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் மேலும் தெரிவித்துள்ளார்.