மேற்கு வங்க மாநிலத்தில் கழட்டிவிட்டு சென்ற காதலியை உண்ணாவிரத போராட்டம் நடத்தியே காதலன் திருமணத்திற்கு சம்மதிக்க வைத்துள்ள சம்பவம் நடந்துள்ளது.
மேற்கு வாங்க மாநிலத்தை சேர்ந்தவர் ஆனந்த பர்மன். இவர் கடந்த 8 வருடங்களாக லிப்பிக்கா என்கிற பெண்ணை காதலித்து வந்துள்ளார்.
ஆனால் லிப்பிக்கா, பர்மனுடன் இருந்த அனைத்து தொடர்புகளையும் திடீரென துண்டித்துள்ளார். இதுகுறித்து பர்மன் விசாரித்த போது, லிப்பிக்காவிற்கு திருமண ஏற்பாடுகள் நடந்து வருவதை கேட்டு அதிர்ச்சியடைந்துள்ளார்.
உடனே லிப்பிக்காவின் வீட்டிற்கு சென்ற பர்மன், உண்ணாவிர போராட்டத்தில் இறங்கியுள்ளார். ”என்னுடைய காதலை திரும்ப கொடு, என்னுடைய 8 வருடத்தை திரும்ப கொடு” போன்ற பதாகைகளுடன் வீட்டின் முன்பு அமர்ந்திருந்துள்ளார்.
இதனை அறிந்த ஊர் மக்கள், நடந்தவற்றை கேள்விப்பட்டு பர்மனுக்கு ஆதரவு தெரிவித்தனர். இதற்கிடையில் மாப்பிள்ளை வீட்டிற்கும் இந்த தகவல் சென்றடைந்துள்ளது.
அவர்களுடன் போராட்டம் நடந்த இடத்திற்கு வந்துள்ளனர். மற்றொரு புறம் வேகமாக வந்த பொலிஸார் பர்மனிடம் பேச்சு வார்த்தை நடத்தியுள்ளனர்.
ஆனால் பர்மன் தன்னுடைய போராட்டத்தில் இருந்து பின்வாங்காமல் இருந்துள்ளார். அடுத்த சில மணி நேரங்களில் பர்மனின் உடல்நிலை மோசமடைந்து மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார்.
இறுதியாக லிப்பிக்கா தன்னுடைய பழைய காதலன் பர்மனை திருமணம் செய்துகொள்ள சம்மதம் தெரிவித்துள்ளார். லிப்பிக்காவின் பெற்றோரும் சம்மதம் தெரிவித்ததும், உடனடியாக திருமணம் நடைபெற்றுள்ளது.