மதுரை அருகே யா.ஒத்தக்கடை அரசு துவக்கப்பள்ளியில் பள்ளியில் தமது குழந்தைகளை சேர்க்க பெற்றோர்களிடையே போட்டி நிலவியது தனியார் பள்ளிகளை மிஞ்சும் வகையில் சேர்க்கை நடைபெற்றது.
பசுமை நிறைந்த இயற்கை சுற்றுச்சூழல் மிகுந்த இடமாக காட்சி அளிக்கிறது. மலைகளுக்கு அடியில் வளாகத்தை சுற்றிலும் மரங்களை நிறைந்த யா.ஒத்தகக்கடை ஊராட்சியில் அமைந்திருப்பதுதான் அந்த தொடக்கப்பள்ளி. சுத்தமான கழிவறை மதில் சுவரெங்கும் வண்ணமயமான ஓவியங்கள் தனியார் பள்ளிக்கு நிகராக வகுப்பறையில் கணினி வசதிகள் உள்ளன. மேலும் ஸ்மார்ட் வகுப்புகளும் கற்பிக்கப்படுகிறது.
இந்த பள்ளியில் சிறந்த ஆசிரியர்களாக அனைவரும் பணியாற்றி வருகின்றனர். கடந்த வருடம் 520 மாணவர்கள் அனால் இந்த வருடம் 600-ஐ தாண்டி விட்டது. பல லட்சம் செலவு செய்து தனியார் பள்ளியில் சேர்ப்பதைவிட இந்த அரசு பள்ளியில் சேர்பதையே பெருமையாக எண்ணி பள்ளி திறக்கும் முன்பாகவே தங்கள் குழந்தைகளை சேர்ப்பதற்காக பெற்றோர்கள் வரிசையில் நின்று பல மணிநேரம் காத்தித்திருந்தனர்.
பள்ளியின் தலைமை ஆசிரியர் மு.தென்னவன் தனியார் பள்ளியை காட்டிலும் அரசு பள்ளியில் நல்லொழுக்கம்,கலை மற்றும் அறிவியல் கல்வியின் மூலம் கற்பிக்கப்படுகிறது. மேலும் மாதம் ஒருமுறை பெற்றோர் ஆசிரியர் கழக கூட்டம் தவறாமல் நடைபெறும். மற்றும் மேலாண்மை குழுக்கள் மூலம் பள்ளிக்கு தேவையான திட்டங்களை தீர்மானம் நிறைவேற்றி செயல்முறைக்கு கொண்டுவரப்படும்.
பள்ளிகளுக்கு தேவையான கணினிகள் மற்றும் ஸ்மார்ட் வகுப்பறைக்கு தேவையான அணைத்து உபகரணங்களும் கடந்த 5 ஆண்டுகளில் பொது நல அமைப்புகள் மற்றும் தன்னார்வர்வலர்கள் மூலம் வசதிகள் ஏற்பாடுகள் செய்யப்படுகிறது
பிஎஸ்எல்வி, ஜிஎஸ்எல்வி என திறன்வளர் குழுக்களை அமைத்து சிறந்த பண்பாளர்களாக வளர்க்க ஏற்பாடுகள் செய்யப்படுகிறது. மதுரை அமெரிக்கன் கல்லூரியில் பணியாற்றும் பேராசிரியர் பிரபாகரன் அவர்களின் முயற்சியில் மாணவர்களுக்கு நாடக கலையை கற்பித்து அரங்கேற்றமும் நடைபெற்றது. அனைத்து அரசு பள்ளிகளும் பார்த்து கற்றுக்கொள்ளும் வகையில் ஒரு சிறந்த எடுத்துக்காட்டாக விளங்குகிறது.