திருநெல்வேலி மாவட்டத்தில் ஜெயமணி என்பவர் ஒரு சுவரொட்டி அச்சிட்டு நகர்புறங்களில் பல்வேறு பகுதிகளிலும் ஓட்டி வருகிறார்.
அந்த சுவரொட்டியில் ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளார். ஆளுக்கு ஒரு போன் அல்லது பைக் விற்று தென்னை, பனை வாங்கவும். வீட்டுக்கு ஒரு டிவி அல்லது கார் விற்று மாடு, குதிரை வாங்கவும். தெருவுக்கு ஒரு டாஸ்மாக் விற்று உணவகமாக மாற்றவும். ஊருக்கு ஒரு கோவில் விற்றும் ஆஸ்ரமமாக மாற்றவும்.
காரணம் இன்று இரவு அல்லது நாளையொடு உலகம் முழுவதும் ஒரே பணத்தை இஸ்ரோ 666 வெளியிட போகிறது. நமது காந்தி படம் போட்ட பணம் செல்லாமல் போகும். இதை வைத்து விவசாயும் இவர்கள் கூட்டணியும் விற்கவும் வாங்கவும் முடியாது.
இந்தியாவில் காந்தி படம் பொறிக்கப்பட்ட ரூபாய் நோட்டுக்கள் செல்லாமல் போகும் என்ற சுவரொட்டியால் மக்கள் மத்தியில் பெரிய அளவில் பீதியை கிளப்பியுள்ளது.