-
மேஷம்
மேஷம்: உங்கள் பேச்சில் அனுபவ அறிவு வெளிப்படும். பிள்ளைகளால் பெருமையடைவீர்கள். உங்களால் மற்றவர்கள் பயனடைவார்கள். வெளிவட்டாரத்தில் அந்தஸ்து உயரும். வியாபாரத்தில் பழைய சரக்குகள் விற்கும். உத்யோகத்தில் அதிகாரிகள் உங்களை நம்பி சில முக்கிய பொறுப்புகளை ஒப்படைப்பார்கள்.
-
ரிஷபம்
ரிஷபம்: இங்கிதமானப் பேச்சால் எல்லோரையும் கவருவீர்கள். தோற்றப் பொலிவுக் கூடும். எதிர்பாராத இடத்திலிருந்து உதவிகள் கிடைக்கும். நட்பால் ஆதாயம் உண்டு. பயணங்கள் சிறப்பாக அமையும். வியாபாரத்தில் புது தொடர்பு கிடைக்கும். உத்யோகத்தில் மேலதிகாரி ஒத்துழைப்பார்.
-
மிதுனம்
மிதுனம்: இன்றும் மாலை 5 மணி வரை ராசிக்குள் சந்திரன் நீடிப்பதால் பழைய கசப்பான சம்பவங்களை பேசிக் கொண்டிருக்க வேண்டாம். பிள்ளைகளின் வருங்காலம் குறித்து யோசிப்பீர்கள். மற்றவர்களுடன் உங்களை ஒப்பிட்டுக் கொண்டிருக்க வேண்டாம். உங்களின் அணுகுமுறையை மாற்றுங்கள். வியாபாரத்தில் பற்று வரவு சுமார்தான். உத்யோகத்தில் விமர்சனங்களை ஏற்றுக் கொள்வது நல்லது. திட்டமிட்டு செயல்பட வேண்டிய நாள்.
-
கடகம்
கடகம்: குடும்பத்தைப் பற்றிய கவலைகள் வந்து நீங்கும். பழைய கடன் பிரச்னை அவ்வப்போது மனசை வாட்டும். உடல் நலம் பாதிக்கும். உறவினர்களால் சங்கடங்கள் வரும். வியாபாரத்தில் போட்டிகளையும் தாண்டி ஒரளவு லாபம் வரும். உத்யோகத்தில் பொறுப்புகள் கூடும். நிதானம் தேவைப்படும் நாள்.
-
சிம்மம்
சிம்மம்: எதையும் சமாளிக்கும் மனப்பக்குவம் கிடைக்கும். பிள்ளைகளால் உறவினர், நண்பர்கள் மத்தியில் செல்வாக்குக் கூடும். நவீன சாதனங்கள் வாங்குவீர்கள். வேற்றுமதத்தவர் அறிமுகமாவார். புதுத் தொழில் தொடங்குவீர்கள். உத்யோகத்தில் சக ஊழியர்கள் பாராட்டுவார்கள். இனிமையான நாள்.
-
கன்னி
கன்னி: சொன்ன சொல்லை காப்பாற்றுவீர்கள். உடன்பிறந்தவர்கள் முக்கிய விஷயங்களை பகிர்ந்துக் கொள்வார்கள். உங்களால் பயனடைந்தவர்கள் இப்போது உங்களுக்கு உதவி செய்வார்கள். வியாபாரத்தில் புது சலுகைகளை அறிவிப்பீர்கள். உத்யோகத்தில் தலைமையின் நம்பிக்கையை பெறுவீர்கள்.
-
துலாம்
துலாம்: உணர்ச்சிப்பூர்வமாகப் பேசுவதை விட்டு அறிவுப் பூர்வமாக செயல்படுவீர்கள். திடீர் முடிவுகள் எடுப்பீர்கள். பிள்ளைகள் கேட்டதை வாங்கித்தருவீர்கள். வீடு, வாகனத்தை சீர் செய்வீர்கள். வியாபாரத்தில் புது ஒப்பந்தம் கையெழுத்தாகும். உத்யோகத்தில் புது அதிகாரி உங்களை மதிப்பார். உற்சாகமான நாள்.
-
விருச்சிகம்
விருச்சிகம்: இன்றும் மாலை 5 மணி வரை சந்திராஷ்டமம் தொடர்வதால் உணர்ச்சிவசப் படாமல் இருங்கள். கடந்த காலத்தில் ஏற்பட்ட இழப்புகள், ஏமாற்றங்களை நினைத்து அவ்வப்போது மனம் கலங்குவீர்கள். உங்களிடம் பழகும் நண்பர்கள், உறவினர்களின் பலம் பலவீனத்தை உணர்வீர்கள். பண விஷயத்தில் கறாராக இருங்கள். வியாபாரத்தில் வசூல் மந்தமாக இருக்கும். உத்யோகத்தில் வேலைச்சுமையால் சோர்வடைவீர்கள்.
-
தனுசு
தனுசு: கணவன்-மனைவிக் குள் ஆரோக்யமான விவாதம் வந்துப் போகும். கேட்ட இடத்தில் உதவிகள் கிடைக்கும். சில வேலைகளை விட்டுக் கொடுத்து முடிப்பீர்கள். வியாபாரத்தில் எதிர்பார்த்த ஒப்பந்தம் கையெழுத்தாகும். உத்யோகத்தில் சக ஊழியர்கள் உங்கள் வேலைகளைப் பகிர்ந்துக் கொள்வார்கள்.
-
மகரம்
மகரம்: கனிவாகப் பேசி காரியம் சாதிப்பீர்கள். பிள்ளைகள் குடும்ப சூழ்நிலை அறிந்து செயல்படு வார்கள். நெடுநாட்களாக நீங்கள் பார்க்க நினைத்த ஒருவர் உங்களை தேடி வருவார். புது ஏஜென்சி எடுப்பீர்கள். வியாபாரத்தில் புது யுக்திகளை கையாளுவீர்கள். உத்யோகத்தில் உங்களின் புதிய முயற்சிகள் பலிதமாகும். தொட்டது துலங்கும் நாள்.
-
கும்பம்
கும்பம்: மற்றவர்களை நம்பி எந்த வேலையையும் ஒப்படைக்கக் கூடாது என்று முடிவெடுப்பீர்கள். அக்கம்-பக்கம் வீட்டாரின் ஆதரவுப் பெருகும். புதியவர்கள் அறிமுகமாவார்கள். பழைய கடன் பிரச்னையில் ஒன்று தீரும். கடையை விரிவுப்படுத்துவீர்கள். உத்யோகத்தில் சக ஊழியர்கள் உதவுவார்கள்.
-
மீனம்
மீனம்: பால்ய நண்பர்கள் தேடி வருவார்கள். வெளிவட்டாரத் தொடர்புகள் அதிகரிக்கும். பழைய கடனைத் தீர்க்க முயற்சி செய்வீர்கள். கலைப்பொருட்கள் வாங்குவீர்கள். வர வேண்டிய பணத்தை போராடி வசூலிப்பீர்கள். வியாபாரத்தில் லாபம் கணிசமாக உயரும். உத்யோகத்தில் விமர்சனங்களையும் தாண்டி முன்னேறுவீர்கள். நன்மை கிட்டும் நாள்.