வெல்லவாய – தனமல்வில பிரதான வீதியின் எதிலிவெவ மகா வித்தியாலயத்திற்கு அருகில் வீதிக் கடவையில் இன்று காலை இடம்பெற்ற வீதி விபத்தில் இரண்டு பாடசாலை மாணவிகள் உட்பட மூன்று பேர் காயமடைந்துள்ளனர்.
அதிக வேகத்தில் வந்த பாரவூர்தியொன்று சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து வீதியை கடக்க முற்பட்ட மாணவிகள் மீது மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
இதன் போது , மேற்படி பாடசாலையின் ஊழியரொருவரும் விபத்துக்குள்ளாகியுள்ளார்.
இதேவேளை, சம்பவம் இடம்பெற்ற போது காவற்துறை சேவையில் ஈடுபடாமை மற்றும் சாரதிக்கு எதிராக சட்ட நடவடிக்கை மேற்கொள்ளுமாறும் கோரி பொதுமக்கள் அப்பகுதியில் எதிர்ப்பில் ஈடுபட்டுள்ளனர்.
11ம் தரத்தில் கல்வி பயிலும் இரண்டு மாணவிகளே இந்த விபத்தில் காயமடைந்துள்ளனர்.
இவர்கள் வெல்லவாய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.