பேஸ்புக் நிறுவனமானது தனது சமூக செய்தி பயன்பாட்டு செயலியான WhatsApp இல் ஒரு பிழையை கண்டறிந்து புகார் அளித்ததற்கான கேரள சிறுவனை பாராட்டியுள்ளது.
கேரளா மாநிலம் பத்தினம் திட்டாவை சேர்ந்த ஆனந்த கிருஷ்ணா (19) என்கிற பொறியியல் மாணவர் மவுண்ட் சீயோன் பொறியியல் கல்லூரியில் படித்து வருகிறார்.
WhatsApp பயனாளருக்கு தெரியாமலே அவருடைய கோப்புகள் அனைத்தையும் நீக்க முடியும் என்கிற பிழையை இரண்டு மாதத்திற்கு முன்பாகவே ஆனந்த கிருஷ்ணா கண்டறிந்துள்ளார்.
இந்த புகாரினை பேஸ்புக் நிறுவனத்திற்கு அனுப்பிய ஆனந்த கிருஷ்ணன், அதனை திருத்தும் நடவடிக்கையை மேற்கொள்ளுமாறு கோரிக்கை விடுத்திருந்தார்.
அதன் பேரில் நடவடிக்கை மேற்கொண்ட பேஸ்புக் நிறுவனம் அவருடைய கூற்றுகளை உறுதிசெய்து, தற்போது 500 டாலர் (ரூ.34,600) ரொக்க பரிசினை வழங்கியுள்ளது.
அதோடு மட்டுமின்றி 2019 ஆம் ஆண்டிற்கான பேஸ்புக் நன்றி பட்டியலில் 80 வது இடத்தில் அனந்தகிருஷ்ணா பெயரையும் சேர்த்து பேஸ்புக் நிறுவனம் கௌரவித்துள்ளது.