சிறுமியை துஸ்பிரயோகித்து நேரலையில் ஒளிபரப்பிய கொடூரன்!

அமெரிக்கவில் பிறந்தது முதலே 6 வயது சிறுமியை பாலியல் வன்புணர்வு செய்து வந்த குற்றவாளிக்கு, 120 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

அமெரிக்காவை சேர்ந்த ஸ்டீவன் டக்ளஸ் (29) என்கிற நபர், 6 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்துவந்ததாக கடந்த 2018ம் ஆண்டு பிப்ரவரி மாதம் கைது செய்யப்பட்டார்.

மேலும் அவருடைய வீட்டில் மேற்கொள்ளப்பட்ட சோதனையில், அந்த சிறுமி பிறந்தது முதலே பலமுறை பாலியல் பலாத்காரம் செய்யப்படும் வீடியோ காட்சிகள் ஏராளமாக இருந்துள்ளன.

அவை அனைத்தையும் கைப்பற்றிய பொலிஸார், குற்றவாளியிடம் விசாரணை மேற்கொண்ட போது, அந்த சிறுமியை 100க்கும் குறைவான முறை பலாத்காரம் செய்ததாகவும், அதில் ஒரு சில சமயம் நேரலையில் ஒளிபரப்பி வந்ததாகவும் கூறியுள்ளான்.

இதனை கேட்டு அதிர்ச்சியடைந்த பொலிஸார் கைது செய்து சிறையிலே அடைத்தனர். மேலும் அவருடைய காதலி கேந்திராவை 2018ம் ஆண்டு மார்ச் மாதம் கைது செய்தனர். அந்த குழந்தை பலாத்காரம் செய்யப்படுவது தெரிந்தும் கூட, வேண்டுமென்றே தனிமையில் ஸ்டீவனுடன் விட்டு சென்றுள்ளார்.

இந்த நிலையில் வழக்கினை கேட்டறிந்த நீதிபதி குற்றவாளிக்கு 120 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளித்தார். இந்த தண்டனையானது மற்ற குற்றவாளிகளுக்கு ஒரு உதாரணமாக இருக்கும் எனவும், கொடூர சம்பவத்திற்கு கடும் கண்டனமும் தெரிவித்தார்.

மேலும், குற்றத்திற்கு உறுதுணையாக இருந்த கேந்திராவிற்கு செப்டம்பர் 18ம் திகதி தண்டனை விவரம் அறிவிக்கப்படும் எனவும் கூறி உத்தரவிட்டார்.