42 வயது வித்தியாசம் உள்ள ஒரு நபரை மணம் செய்து கொண்டுள்ள ஒரு இளம்பெண், உடற்பயிற்சி நிலையத்தில் அவரைக் கண்டதும் காதல் ஏற்பட்டதாக தெரிவிக்கிறார்.
முதன்முதலில் உடற்பயிற்சி மையத்தில் சந்தித்த டெக்சாஸை சேர்ந்த Courtney Roman (23)ம் Robert (65)ம் 12 மாதங்கள் பழகிய நிலையில் திருமணம் செய்து கொண்டிருக்கிறார்கள்.
தங்கள் உறவின் அடையாளமாக குழந்தைகளை பெற்றுக்கொள்ள விரும்புகிறது இந்த ஜோடி. மகிழ்ச்சியான திருமண வாழ்க்கை வாழ்ந்தாலும், பொது இடங்களுக்கு செல்லும்போது மற்றவர்கள் தன்னை Robertஇன் மனைவியாக பார்க்க மாட்டேன்கிறார்கள் என்கிறார் Courtney.
தங்களுடையது, பணத்திற்காக வயதில் மூத்த ஆண்களுடன் பழகும் sugar daddy உறவு என்று கூட மக்கள் நினைப்பதாக தெரிவிக்கிறார் Courtney.
அப்படி இல்லை, தாங்கள் கணவனும் மனைவியும் என்று தெரிய வந்தாலும், பணத்திற்காக, தான் Robertஐ மணந்து கொண்டதாக நினைக்கிறார்கள் என்று கூறும் Courtney, தனக்கு பணத்தைப் பற்றியெல்லாம் கவலையில்லை என்கிறார்.