பாம்பைக் கண்டதும் மனைவியை விட்டு ஓட்டம் பிடித்த கணவன்!

அமெரிக்காவில் ரோந்து சென்ற பொலிசார் ஒருவர் ஒரு தம்பதி படுத்திருப்பதையும், அவர்கள் தலைக்கருகில் ஒரு கொடிய விஷமுள்ள பாம்பு கிடப்பதையும் கண்டிருக்கிறார்.

வெளியான வீடியோவில், மெதுவாக அவர்களை எழுப்பும் அவர், நகராதீர்கள், உங்கள் அருகில் ஒரு பாம்பு இருக்கிறது, என்னை நோக்கி உருண்டு வாருங்கள் என்று கூறுவதை காணலாம்.

இந்த சம்பவம் நடந்தது அமெரிக்காவின் டென்னசியில்.

Adam Sisk என்ற அந்த பொலிசார், அந்த தம்பதியை எச்சரிக்க, தூக்கத்திலிருந்து விழித்த அந்த கணவன், பாம்பைக் கண்டதும் தனது ஆசை மனைவியை விட்டு விட்டு ஓட்டம் பிடிக்கிறார்.

வீட்டில் சொகுசாக மெத்தையில் இருந்து விழிப்பதுபோல் மெதுவாக எழுந்திருக்கும் அந்த பெண், எழுந்து Adamஐ நோக்கி வருகிறார்.

அந்த தம்பதி ஏன் அங்கு படுத்திருந்தார்கள் என்பது தெரியவில்லை.

பின்னர் Adam அவர்களை பத்திரமாக அவர்கள் போக வேண்டிய இடத்திற்கு தனது வாகனத்தில் ஏற்றிக் கொண்டு போய் விட்டிருக்கிறார்.

Adam சரியாக அந்த நேரத்திற்கு அங்கு வராதிருந்தால், ஒருவேளை ஏதேனும் அசம்பாவிதம் நிகழ்ந்திருக்கவும் வாய்ப்புள்ளது.