தமது அரசாங்கத்தில் கூட முஸ்லிம் மக்களை காப்பாற்ற முடியவில்லையென முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் ஆதங்கம் வெளியிட்டுள்ளார் .
வானொலிக்கு ஒன்றிற்கு வழங்கிய நேர்காணலிலேயே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
பௌத்த பிக்குகள் சிலர் வெறுப்புணர்வை தூண்டும் பேச்சில் ஈடுபட்டாலும், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படுவதில்லையென்றும், அண்மையில் மன்னிக்கப்பட்ட ஒரு பிக்கு மற்றும் சிலரின் பேச்சுக்களில் இத்தகைய தன்மையிருந்தபோதும், அரசாங்கமோ படைகளோ அவற்றை கட்டுப்படுத்தவில்லையென்றும் ஹக்கீம் கூறியுள்ளார்.
அத்துடன் நாட்டில் இடம்பெற்ற அண்மைய சம்பவங்களால் முஸ்லிம் மக்களின் வாழ்க்கை,மற்றும் தொழில் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை வெறுப்பு, வகுப்புவாதத்தை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்காவிட்டால், அரசியல்ரீதியான முடிவொன்றை எடுக்க வேண்டியிருக்கும் எனவும் இதன்போது முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் எச்சரிக்கை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.