தமிழகத்தில் ஆண்டு முழுவதும் 24 மணி நேரமும் கடைகள் திறக்க, தமிழக அரசு விரைவில் வெளியிடும் என எதிர்பார்க்கப்பட்டது. குறிப்பிட்ட நிபந்தனைகள் அடிப்படையில் 24 மணிநேரமும் கடைகள் மற்றும் வணிக நிறுவனங்கள் இயக்க தொழிலாளர் ஆணையம் பரிந்துரை செய்தது.
இந்நிலையில், தமிழகத்தில் ஆண்டு முழுவதும் 24 மணி நேரம் கடைகள் செயல்படும் தமிழக அரசு அரசாணை வெளியீடு. கடைகள் 24 மணி நேரமும் திறந்திருக்கும் அனுமதிக்கும் அரசாணை மூன்று ஆண்டுகளுக்கு அமலில் இருக்கும்.
கடைகள் 24 மணி நேரமும் திறக்க பாதுகாப்பிற்காக உள்ளிட்ட சில நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளது. நிபந்தனைகளைப் பின்பற்றி 24 மணி நேரமும் கடைகள் வணிக நிறுவனங்கள் திறக்கலாம் என்று தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.