காஷ்மீர் மாநிலம் புல்வாமா மாவட்டத்தில் கடந்த 14-ம் தேதி துணை ராணுவ படை வீரர்கள் வந்த பேருந்துகளை குறிவைத்து தற்கொலைப்படை தாக்குதல் நடத்தியதில் 44 துணை ராணுவப் படை வீரர்கள் வீரமரணம் அடைந்தனர்.
அதில் தமிழகத்தில் இரண்டு வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். அரியலூரை சேர்ந்த சிவசந்திரன் மற்றும் தூத்துக்குடியை சேர்ந்த சுப்பிரமணியன் உள்ளிட்டோர் வீரமரணம் அடைந்தனர்.
இந்நிலையில் அவரது குடும்பத்திற்கு தமிழக அரசு சார்பில் தலா 2 லட்சம் ரூபாய் நிதி உதவி வழங்கப்பட்டது. தற்போது சென்னை மாநகர காவல்துறை சார்பில் தலா 10 லட்சம் ரூபாய் வீரர்களின் குடும்பத்திற்கு முதலமைச்சர் பழனிசாமி வழங்கி உள்ளார். சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள அவரது இல்லத்தில் நடந்த நிகழ்ச்சியில் காவல்துறை டிஜிபி ராஜேந்திரன், சென்னை ஆணையர் விஸ்வநாதன் ஆகியோர் பங்கேற்றனர்.