இந்த உலகில் பெண்களுக்கு பல விதமான அநீதிகள் நடைபெற்று வருகிறது. சிறு குழந்தைகள் முதல் முதுமையில் இருக்கும் பெண்கள் வரை அரங்கேறும் தொடர் பாலியல் வன்முறைகள் பெரும் அச்சத்தினை நம்மிடையே பதிவு செய்கிறது.
இந்த நிலையில்., அமெரிக்காவை சார்ந்த வாலிபரின் பெயர் ஸ்டெவன் டக்லஸ் (வயது 29)., இவர் அதே பகுதியை சார்ந்த சுமார் 6 வயதுடைய பெண் குழந்தைக்கு பாலியல் வன்கொடுமை செய்ததாக கடந்த 2018 ம் வருடத்தில் காவல் துறையினரால் கைது செய்யப்பட்டான்.
இவனிடம் காவல் துறையினர் மேற்கொண்ட தீவிர விசாரணையில்., அந்த குழந்தையை சிறுவயதில் இருந்தே தொடர்ந்து பலாத்காரம் செய்து வந்ததும்., சிறுமியின் பலாத்கார வீடியோ பதிவுகளும் கைப்பற்றப்பட்டன.
இந்த நிலையில்., சிறுமியை சுமார் 100 க்கும் மேற்பட்ட முறை பலாத்காரம் செய்திருக்கலாம் என்றும்., இந்த பலாத்கார வன்கொடுமை காட்சிகளை சில சமயத்தில் இணையத்தில் நேரடி ஒளிபரப்பு செய்ததும் தெரியவந்தது.
இதனை கேட்டு அதிர்ச்சியடைந்த காவல் துறையினர்., அவனின் மீது அதிரடியாக வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில்., இந்த பெரும் துயரை செய்வதற்கு., அவனுடைய காதலியும் உதவி செய்துள்ளது தெரியவந்தது.
இதனையடுத்து இருவரின் மீதும் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து., இந்த வழக்கு தொடர்பான விசாரணை அங்குள்ள நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில்., குற்றவாளியான ஸ்டெவன் டக்லசிற்க்கு சுமார் 120 வருடங்கள் சிறை தண்டனை அறிவித்து நீதிபதி உத்தரவிட்டார். அவரது காதலிக்கு வரும் 18 ம் தேதி தண்டனை அறிவிப்பதாக இந்த தீர்ப்பை ஒத்திவைத்துள்ளார்.