முதலில் இதை செய்யவேண்டும், திருமணத்திற்கு அவசரம் இல்லை: தமன்னா

நடிகை தமன்னா நடித்திருந்த தேவி2 படம் சென்ற வாரம் திரைக்கு வந்தது. அதில் தமன்னா படுகவர்ச்சியாக ஒரு பாடலுக்கு நடனம் ஆடியிருந்த்தது பரபரப்பாக பேசப்பட்டது.

தற்போது தமன்னா அளித்துள்ள பேட்டி ஒன்றில் திருமணம் பற்றி பேசியுள்ளார். அந்த கவர்ச்சி பாடல் பற்றி கேட்டதற்கு ‘அது அந்த கதாபாத்திரத்திற்கு தேவைப்பட்டது, கணவரை கவர அப்படி அந்த பெண் செய்வார். நான் அப்படி செய்யவில்லை’ என பதில் கூறியுள்ளார்.

திருமணம் எப்போது என அவரிடம் கேட்டதற்கு ‘இப்போதைக்கு திருமணம் செய்யும் எண்ணம் இல்லை. இன்னும் கற்றுக்கொள்ளவேண்டியது நிறைய உள்ளது. எனக்கு டிரைவிங் தெரியாது. அதுமட்டுமின்றி ஸ்விம்மிங் கூட தெரியாது. அதை கற்றுக்கொள்ளவேண்டும்” என தமன்னா பதில் அளித்துள்ளார்.