முற்றிலும் அழிந்த கலாச்சாரங்கள்.. வேதனையில் தமிழக ஆளுநர்!

சென்னை மணப்பாக்கத்தில் உள்ள பாபுஜி மெமோரியல் ஆசிரமத்தில் My Grandma Tales தொடக்க நிகழ்ச்சியில் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் கலந்துகொண்டு உரையாற்றினார்.

அப்போது அவர் கூறியவை, இந்தியாவின் கலாச்சாரம் கூட்டுக் குடும்பம் தான். எனக்கு கூட்டு குடும்பமாக இருக்க தான் பிடிக்கும் என கூறினார். கூட்டுக் குடும்பத்தில் இருந்தால் தான் குழந்தைகளுக்கு கலாச்சாரம், பண்பாடு, பழக்கவழக்கங்கள் ஆகியவை கற்றுக் கொடுக்க முடியும் எனக் கூறினார்.

தாத்தா பாட்டி கதைகள் தனக்கு மிகவும் பிடிக்கும் என்று பன்வாரிலால் புரோகித் கூறினார். மேலும், அந்தமான், சிந்துபாத் கதைகள் படித்துள்ளதகவும் தெரிவித்துள்ளார். கூட்டுக் குடும்ப முறை தற்போது இல்லை என்று ஆளுநர் பன்வாரிலால் புரோகித் வேதனையுடன் தெரிவித்துள்ளார்.