அதிக திருமணம் செய்து கொண்டவர்? மனைவிகள் எண்ணிக்கையை கேட்ட ஷாக் ஆயிடுவீங்க

உலகிலேயே அதிக முறை திருமணம் செய்து கொண்டவர் என்ற பெயருக்கு கலிபோர்னியாவில் வசித்த கிளையன் உல்ப் என்பவர் சொந்தகாரராக உள்ளார்.

கடந்த 1908-ஆம் ஆண்டு பிறந்த கிளையன் 1997-ஆம் ஆண்டு உயிரிழந்தார்.

கின்ன்ஸ் சாதனை புத்தகத்தின் கூற்றுப்படி கிளையன் 29 பெண்களை தனித்தனியாக திருமணம் செய்து கொண்டுள்ளார்.

கிளையனுக்கு 40-க்கும் அதிகமான குழந்தைகள் உள்ளனர். இவரின் முதல் மனைவி பெயர் மார்கி மெக்டொனால்டு. இவரை கிளையன் 1926-ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார்.

இவர் கடைசி மனைவி பெயர் லிண்டா. இவரை கிளையன் கடந்த 1996-ஆம் ஆண்டு மணந்தார். இதில் பல பெண்களை கிளையன் விவாகரத்து செய்தார், சிலர் அவருடன் வாழும் போதே இறந்துவிட்டனர்.

கிளையன் குறைந்தபட்சமாக ஒரு பெண்ணுடன் 19 நாட்களே கணவராக வாழ்ந்துள்ளார். அதிகபட்சமாக ஒரு பெண்ணுடன் 11 ஆண்டுகள் வாழ்ந்துள்ளார்.