பாஜக 2014 ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்ததும் கட்சியை இன்னும் வளப்படுத்தும் வகையில் நாடு முழுவதும் உறுப்பினர் சேர்க்கை தீவிரப்படுத்தப்பட்டது. இதன் காரணமாக பாஜகவின் உறுப்பினர் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்தது.
தற்போது 11 கோடி உறுப்பினர்கள் பாஜகவில் உள்ளனர். இந்த நாடாளுமன்ற தேர்தலில் அதிக தொகுதிகளில் வெற்றி பாஜக மீண்டும் ஆட்சி அமைத்துள்ளது. கட்சியை இன்னும் வளர்ச்சி பாதையில் கொண்டு செல்லும் வகையில் அடுத்த கட்ட நடவடிக்கைகளை எடுக்க பிரதமர் மோடி உத்தரவிட்டுள்ளார்.
இதன்படி மீண்டும் உறுப்பினர் சேர்க்கை தீவிரப்படுத்த உள்ளனர். இதில் மாநில கட்சிகள் தீவிரமாக செயல்பட வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி உத்தரவிட்டுள்ளார். நாடாளுமன்றற தேர்தலில் வெற்றி பெற்றுவிட்டோம் என்ற எண்ணத்தில், அமைதியாக இருந்துவிட வேண்டாம். உறுப்பினர் சேர்க்கையை அதிகரிக்க அதிக கவனம் செலுத்த வேண்டும் என்று அனைத்து மாநில தலைவர்களுக்கு மோடி உத்தரவு பிறப்பித்துள்ளார்.
ஏனென்றால் மராட்டியம், ஜார்கண்ட், அரியானா, காஷ்மீர் ஆகிய 4 மாநிலங்களின் சட்டமன்ற தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் அதிக இடங்களை பாஜக வெற்றி பெற இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.