வெப்பமயமாதலுக்கு இந்தியா உள்ளிட்ட நாடுகளே காரணம்: அதிபர் டிரம்ப்

இங்கிலாந்திற்கு அரசுமுறை பயணமாக சென்ற அதிபர் டொனால்டு டிரம்ப் அவர்கள் செய்தியாளர்களை சந்தித்து கூறியது. பாரிஸ் நகரில் நடந்த பருவ நிலை குறித்த மாநாடு 2017 ல் நடைபெற்றது.

உலகம் வெப்பமயமாதலை தடுப்பதற்கு பல நாடுகள் உறுதி அளித்துள்ளது. இந்தியா சீனா ரஷ்யா போன்ற நாடுகள் பருவநிலை மாற்றத்தை கட்டுப்படுத்த தவறியது. மக்கள் தொகை நெருக்கம் காரணமாக மாசு கட்டுப்பாடில்லாமல் இருக்கும் நாடுகள் என்று அதிபர் டிரம்ப் செய்தியாளர்களிடம் கூறினார்.

இயற்கை வளங்கள் மற்றும் உலக வெப்பமயமாதல் பாதுகாக்க தவறினால் பெரிய அபாயத்தை சந்திக்க நேரிடும் என்றும் தெரிவித்தார். அனால் அமெரிக்காவில் பருவநிலை மாற்றம் கட்டுப்டுத்தப்படுகிறது மேலும் இங்கு காற்று மற்றும் நீர் மிகவும் தூய்மையாக உள்ளது என்றும் தெரிவித்தார்