பிரேமம் மலையாள படம் மூலம் தென்னிந்தியா முழுவதும் பிரபலமானவர்கள் நடிகைகள் சாய் பல்லவி மற்றும் அனுபமா பரமேஸ்வரன் இருவரும் தமிழ் தெலுங்கு என இரு மொழிகளிலும் நடித்து வருகின்றனர்.
இந்நிலையில் நடிகை அனுபமா பரமேஸ்வரன் இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் பும்ராவின் ஸ்டேட்டஸ் மற்றும் ட்வீட்டர் அனைத்திற்கும் லைக் செய்து வருகிறார்.
மேலும், அனுபமா பரமேஸ்வரன் ஸ்டேட்டஸ் மற்றும் ட்வீட்டர் அனைத்திற்கும் பும்ரா லைக் செய்து வருகின்றார். இதனால் இருவருக்கும் இடையே காதல் மலர்ந்துள்ளதாக கிசுகிசு வெளியாகி உள்ளது.