மாளிகாவத்தை பிரதேசத்தில் குடும்பஸ்தர் ஒருவர் கூரிய ஆயுதத்தால் தாக்கியதில் அவரின் மகன் உயிரிழந்துள்ளார்.
17 வயதுடைய இளைஞர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்த நிலையில் , சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்நிலையில் அவர்களுக்குள் நீண்ட காலமாக நிலவி வந்த குடும்ப பிரச்சினை காரணமாக இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அத்துடன் குறித்த நபர் மனைவி மற்றும் மகன்மீது தாக்குதல் மேற்கொண்ட நிலையில் அவர்கள் இருவரும் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் மகன் உயிரிழந்துள்ளார்.
மேலும் சம்பவம் தொடர்பில் மாளிகாவத்தை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.