இன்றுமுதல் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் கிழக்கு மாகாணத்துக்கான பொறுப்பாளராக தேவராஜா தெரிவாகியுள்ளார். உயர்மட்ட ஆலோசகர்கள் பலர் இவரை தெரிவுசெய்துள்ளதாக அதிர்வு இணையம் அறிகிறது. கிழக்கில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழலை கருத்தில் கொண்டு, அங்கே தமிழர்களின் பலத்தை கூட்டவும். தமிழர்கள் பாதுகாப்பாக வாழவும் , பல புத்திஜீவிகள் இணைந்து பெரும் திட்டம் ஒன்றை வகுத்துள்ளார்கள் என மேலும் அறியப்படுகிறது.
இதனை உடனே நடைமுறைப்படுத்த சுவிஸ், லண்டன், அமெரிக்கா மற்றும் கனடா ஆகிய நாடுகளில் உள்ள பல தமிழ் புத்திஜீவிகள் ஒன்றுபட்டுள்ளார்கள் என்பது மிக மிக வரவேற்க்க தக்க விடையமாக உள்ளது. நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் கிழக்குமாகான அணி என்ற ஒரு தனிப் பிரிவு இன்று முதல் செயல்பட ஆரம்பிக்க உள்ளது. இதில் கிழக்கை சேர்ந்த பல புத்திஜீவிகள் உள்ளார்கள் என்றும் கூறப்படுகிறது.