என்ன வடிவான உடல்… கர்ப்பிணி பெண்ணை வர்ணித்த மகப்பேறு மருத்துவர்…

கனடாவின் மாண்ட்ரீல் பகுதியில் கர்ப்பிணி பெண்களை ஆபாசமாக வர்ணித்த ஆண் மகப்பேறு மருத்துவர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

குறித்த ஆண் மருத்துவரின் உரிமத்தை இரண்டு ஆண்டுகளுக்கு தடை செய்துள்ளதாக புதனன்று கனேடிய மருத்துவர்கள் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

மாண்ட்ரீல் பகுதியில் அமைந்துள்ள யூதர்களின் பொது மருத்துவமனையில் மகப்பேறு மருத்துவராக பணியாற்றி வந்துள்ளார் ஆலன் கிளிமன்.

கடந்த 2015 ஆம் ஆண்டு 10 வார கர்ப்பிணி பெண் ஒருவர் தமது கணவருடன் இவரிடம் ஆலோசனைகளுக்காகவும் பரிசோதனைக்காகவும் சென்றுள்ளார்.

குறித்த பெண்ணிடம் விசாரணையை துவங்கிய கிளிமனிடம், முதல் குழந்தை தமக்கு அறுவை சிகிச்சை மூலமே பிறந்தது எனவும்,

ஆனால் தமது இரண்டாவது குழந்தை இயற்கையான முறையில் பிறப்பதை எதிர்பார்ப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

ஆனால் அதற்கு பதிலளித்த கிளிமன், பாலியல் ரீதியான உவமைகளுடன் குறித்த பெண்ணிடம் உரையாடியுள்ளார்.

மட்டுமின்றி உங்களது உடல் வடிவாக உள்ளது எனவும், உங்களை பரிசோதனைக்கு உட்படுத்த இனி நான் தாமதப்படுத்த விரும்பவில்லை எனவும் குறிப்பிட்டுள்ளார்.

மட்டுமின்றி அவரது ஒப்புதல் இன்றியே பரிசோதனைக்கும் உட்படுத்தியுள்ளார். இந்த நிகழ்வால் கடுமையான மன உளைச்சலுக்கு உள்ளான அந்த தம்பதி உடனடியாக மருத்துவமனை நிர்வாகத்திடம் எழுத்து பூர்வமான புகார் ஒன்றையும் அளித்துள்ளது.

இந்த புகார் தொடர்பில் விசாரணை மேற்கொண்ட மருத்துவமனை நிர்வாகத்திடம், தமக்கு சாதகமாக வாதாடிய கிளிமன்,

வாரம் ஒன்றிற்கு 140 நோயாளிகளை தாம் சந்தித்து வருவதாகவும், ஆண்டுக்கு 250 முதல் 280 மகப்பேறு மருத்துவம் மேற்கொள்வதாகவும்,

இதனால் தம்மை நம்பும் நோயாளிகளை தாம் ஏமாற்ற முடியாது எனவும், தமது உரிமத்தை தடை செய்வது என்பது அவர்களை ஏமாற்றுவது போலாகும் எனவும் வாதிட்டுள்ளார்.

மேலும், மகப்பேறு பரிசோதனைக்கு வரும் பெண்களின் பதற்றத்தை குறைக்கவே தாம் அதுபோன்று பேசியதாகவும், இதுவும் உளவியல் சிகிச்சை என்றே மருத்துவர் கிளிமன் தெரிவித்துள்ளார்.

ஆனால் மருத்துவர் கிளிமன் தொடர்பில் ஏராளமான புகார்கள் நிர்வாகத்திற்கு கிடைத்துள்ளது என்பதால் நடவடிக்கை எடுக்காமல் காப்பாற்ற முடியாது எனவும் நிர்வாகம் உறுதிபட தெரிவித்துள்ளது.