ஸ்ருதி ஹாசன் கேட்ட சம்பளம்..

நடிகை ஸ்ருதிஹாசன் வேதாளம், சிங்கம் 3 படத்திற்கு பிறகு தமிழில் எந்த படத்திலும் நடிக்கவில்லை. அவர் காதலருடன் மட்டுமே அதிக நேரம் சுற்றிவந்ததால் படங்கள் நடிப்பதை தவிர்த்துவந்தார். ஆனால் இருவருக்கும் பிரேக்கப் என சமீபத்தில் செய்தி வந்தது.

நீண்ட இடைவேளைக்கு பிறகு தற்போது லாபம் என்ற படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நடிக்கதுவங்கியுள்ளார்.

இந்நிலையில் தற்போது தெலுங்கு சினிமாவில் இருந்தும் ஸ்ருதிக்கு சில வாய்ப்புகள் வருகிறதாம். ரவி தேஜா ஜோடியாக நடிக்க ஸ்ருதியை ஒரு பிரபல தயாரிப்பாளர் அணுகியுள்ளார்.

ஆனால் ஸ்ருதிஹாசன் ஒன்றரை கோடி சம்பளம் கேட்டதால் அதிர்ந்த அவர் வேறு நடிகைகளை போட்டுக்கொள்ளலாம் என முடிவெடுத்துவிட்டதாக கூறப்படுகிறது.