அமெரிக்காவின் மேரிலான்ட் மாகாணத்தில் தந்தையின் கண்முன்னே அவரது மகளை உபர் சாரதி ஒருவர் துஸ்பிரயோகத்திற்கு உள்ளாக்கிய சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
கிழக்கு அமெரிக்க மாகாணமான மேரிலான்டில் உள்ள பால்டிமோர் பகுதியில் குறித்த அதிர்ச்சி சம்பவம் அரங்கேறியுள்ளது.
சம்பவத்தன்று 25 வயதான தமது மகள் குடியிருப்புக்கு திரும்புவதில் தாமதம் ஏற்பட்டதை அடுத்து, அவரது தந்தை தமது மொபைலில் உள்ள செயலி மூலம் கண்காணித்துள்ளார்.
இதனையடுத்து தமது மகள் பயணித்த உபர் டாக்ஸியை தொடர்ந்து சென்ற அவருக்கு கடும் அதிர்ச்சி காத்திருந்தது.
தமது மகளை அந்த உபர் சாரதி, பின் இருக்கையில் வைத்து துஸ்பிரயோகம் செய்வதை அவர் கண்கூடாக பார்த்துள்ளார்.
இச்சம்பவத்தால் அதிர்ச்சியடைந்த அந்த தந்தை, உடனடியாக அந்த சாரதியுடன் சில வார்த்தைகள் உரையாடியுள்ளார்.
இதனையடுத்து அந்த இளம்பெண்ணின் கைப்பையை டாக்ஸியில் இருந்து வெளியே வீசிய அந்த சாரதி, அங்கிருந்து மாயமாகியுள்ளார்.
உடனடியாக பொலிசாரை தொடர்புகொண்ட அந்த தந்தை, நடந்தவற்றை விளக்கி புகார் அளித்துள்ளார்.
இந்த விவகாரத்தை பொலிசார், கற்பழிப்பு வழக்காகவே பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
மேலும் அப்பகுதி உபர் நிர்வாகிகளுடன் இணைந்து தகவல் சேகரிக்கப்பட்டு வருவதாகவும், மிக விரைவில் அந்த சாரதியை கைது செய்வோம் எனவும் பொலிசார் தெரிவித்துள்ளனர்.
மட்டுமின்றி, சமீப நாட்களில் இதுபோன்ற புகார்கள் ஏதும் உபர் சாரதிகள் தொடர்பில் பதிவாகவில்லை எனவும்,
இதுபோன்ற விவகாரத்தில் பாதிக்கப்பட்டவர்கள் வேறு எவரேனும் இருப்பதாக நம்பவில்லை எனவும் பொலிசார் விளக்கமளித்துள்ளனர்.