பாராளுமன்ற தெரிவுக்குழு முன்னிலையில், புலனாய்வு மற்றும் பாதுகாப்பு அதிகாரிகளை அழைத்து விசாரிப்பது மற்றும் புலனாய்வுத் தகவல்களை பகிரங்கப்படுத்துவதை அனுமதிக்க முடியாதென ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
புலனாய்வு மற்றும் பாதுகாப்பு அதிகாரிகளை அழைத்து ஊடகங்கள் முன்னிலையில் தகவல்கள் பகிரப்படுவதற்கு உடன்படப்போவதில்லையென ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மேலும் தெரிவித்துள்ளார்.
இன்று இரவு இடம்பெற்ற அவசர அமைச்சரவைக் கூட்டத்தின் போதே ஜனாதிபதி மேற்கண்டவாறு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.