சவூதி அரேபியாவில் அரசுக்கு எதிரான போராட்டங்களில் கலந்துகொண்டதற்காக 18 வயது சிறுவனுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
சவுதியை சேர்ந்த முர்டரா குரேரிஸ் என்கிற 18 வயது சிறுவன், கடந்த 2011ம் ஆண்டு அரசுக்கு எதிராக நடைபெற்ற போராட்டம் ஒன்றில் கலந்து கொண்டிருந்துள்ளான்.
அதன் பிறகு 2011ம் ஆண்டு, பயங்கரவாத இயக்கத்தில் சேர்ந்து போராட்டம் நடத்தியபோது கொல்லப்பட்ட அவனுடைய சகோதரன் அலி குரேரிஸ் இறுதிச்சடங்கில் பங்கேற்றுள்ளான் என பல வழக்குகள் பதியப்பட்டுள்ளன.
2014ம் ஆண்டு தன்னுடைய குடும்பத்துடன் பஹ்ரைன் நோக்கி சென்றுகொண்டிருந்த போது, முர்டரா குரேரிஸ் கைது செய்யப்பட்டுள்ளான்.
அதன்பிறகு சிறையில் அடைக்கப்பட்ட முர்டரா விசாரணை என்கிற பெயரில் கடுமையாக தாக்கப்பட்டுள்ளான். அந்த சமயத்தில் குற்றசாட்டுகளை ஒப்புக்கொண்டால் விடுவிப்பதாக முர்டராவிடம் விசாரணை அதிகாரிகள் கூறியுள்ளனர்.
பின்னர் மே மாதம் 2017 ஆம் ஆண்டில் 16 வயது நடந்துகொண்டிருந்த போதே அல்-தபாமில் உள்ள அல்-மாபாத் சிறைக்கு மாற்றப்பட்டான்.
இந்த நிலையில் பல்வேறு குற்றச்சாட்டுகளில் ஈடுபட்டதாக கைது செய்யப்பட்டிருக்கும் 37 பேருடன் சேர்ந்து, முர்டராவிற்கும் மரண தண்டனை விதிக்கப்பட உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.