படங்களில் நடிப்பது மட்டுமில்லாமல் பாடவும் செய்யக்கூடிய நடிகர்களில் ஒருவர் விஜய். மேலும் தன்னுடன் நடிப்பவர்களின் திறமைகளையும் வெளி உலகத்திற்கு கொண்டு வர எண்ணுவார்.
அப்படி தான் தமிழன் படத்தில் உள்ளத்தை கிள்ளாதே என்ற பாடலை விஜய்யுடன் அப்படத்தின் நடிகை ப்ரியங்கா சோப்ராவும் பாடியிருப்பார். உண்மையில் இவரை இந்த பாடலை பாட வைத்தது விஜய் தானாம்.
இதுகுறித்து அப்படத்தின் இசையமைப்பாளர் டி.இமான் சமீபத்திய பேட்டி ஒன்றில் கூறுகையில், அன்று அப்படத்தில் இருக்கும் மற்றொரு சாங்கான ஹாட் பார்ட்டி பாடலின் ஷூட்டிங் நடந்துனு இருந்தது. செட்டில் இருந்த ப்ரியங்கா சோப்ரா மேடம் அந்த பாடலை ஹம்மிங் செய்து கொண்டே இருந்தார்கள். இதை பார்த்த விஜய் என்னை கூப்பிட்டு அவங்களும் நல்லா பாடுற மாதிரி தான் தெரிது, அவங்களையும் பாட வைத்து பார்ப்போமே, நீங்க வேண்டும் என்றால் ஒரு தடவை அவங்க பாடுவதை கேளுங்கள் என்றார். பிறகு நான் தனியாக கேட்டுவிட்டு விஜய்யுடனேயே ஒரு பாடலை பாட வைத்தேன் என்றார், டி.இமான்.