டிடி-யிடம் காதலை வெளிப்படுத்திய பிரஜன்…

பிரபல டிவி என்றவுடன் பலருக்கும் முதலில் நினைவுக்கு வருபவர்களில் ஒருவர், தொகுப்பாளினி திவ்ய தர்ஷினி. இவர் சிரித்து கொண்டே தொகுத்து வழங்கும் நிகழ்ச்சிக்கு மிக பெரிய ரசிகர்கள் கூட்டமே உள்ளது.

இவர் தொகுத்து வழங்கி வரும் நிகழ்ச்சி அனைத்திற்குமே ரசிகர்கள் ஆதரவு கொடுத்து வருகின்றனர். சொந்த வாழ்க்கையில் பல கசப்பான சம்பவத்திற்குப் பின்பு தற்போது டிடி மீண்டும் தொகுப்பாளினியாக களமிறங்கியுள்ளார்.

ஆம் பிரபல ரிவியில் எங்கிட்ட மோதாதே நிகழ்ச்சியினை தொகுத்து வழங்கி வருகின்றார். இதில் போட்டியாளராக கலந்து கொண்ட பிரஜன் தொகுப்பாளினி டிடி-யிடம் காதலை வெளிப்படுத்தியுள்ளார். பிரஜன் டிடி-யின் நண்பர் என்பதும் இருவரும் இணைந்து இந்நிகழ்ச்சியில் போட்ட பிளானை மிகவும் கச்சிதாகமாக நடித்துக் காட்டியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.