இருட்டான பகுதியிலிருந்து கேட்ட குழந்தையின் அழுகுரல் சத்தம்….

அமெரிக்காவில் பிறந்த ஒருமணி நேரம் மட்டுமே ஆன பிஞ்சுக்குழந்தை தொப்புள் கொடியுடன் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவின் ஜோர்ஜியா மாகாணத்தை சேர்ந்த ஆலன் ராகட்ஸ் என்பவர் தன்னுடைய மூன்று மகள்களுடன் வீட்டிற்கு சென்றுகொண்டிருந்துள்ளார்.

காட்டுப்பகுதியில் இருந்து வினோதமான ஒரு சத்தம் வருவதாக அவருடைய மூன்று மகள்களும் ஆலனிடம் கூறியுள்ளனர்.

உடனே ஆலனும், கையில் டார்ச் லைட் மற்றும் ஆயுதங்களுடன் அப்பபகுதிக்குள் சென்று பார்த்துள்ளார். அங்கு ஒரு பிளாஸ்டிக் பையில் தொப்புள் கொடியுடன் ஒரு குழந்தை இருப்பது பார்த்து பெரும் அதிர்ச்சியடைந்துள்ளார்.

பின்னர் அவர் கொடுத்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த பொலிஸார் குழந்தையை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

தற்போது அந்த குழந்தைக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் அந்த குழந்தையின் தாயை தேடி வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த சம்பவம் குறித்து பேசிய ஆலன், என்னுடைய மூன்று மகள்களுக்கும் தான் நன்றி சொல்ல வேண்டும். அவர்களால் தான் அந்த குழந்தை மீட்கப்பட்டது என தெரிவித்துள்ளார்.