குழந்தை பெற்றெடுத்த பின்னர் பிரித்தானிய இளவரசி மேகன் முதன்முறையாக தன்னுடைய கணவருடன் பொதுமக்கள் முன் தோன்றியுள்ளார்.
பிரித்தானிய இளவரசி மேகனுக்கு கடந்த மே 6ம் திகதியன்று அழகிய ஆண் குழந்தை பிறந்தது. ஆர்ச்சி என பெயரிடப்பட்ட அந்த குழந்தையினை இளவரசர் ஹரி தன்னுடைய கையில் ஏந்தியபடியே உலகத்திற்கு அறிமுகம் செய்து வைத்தார்.
அதன்பிறகு கிட்டத்தட்ட ஒரு மாதகாலமாக வெளியில் எங்கும் தோன்றாத மேகன், முதன்முறையாக இன்று தன்னுடைய கணவருடன் அரச நிகழ்ச்சியில் கலந்துகொண்டுள்ளார்.
ராணியின் பிறந்தநாள் விழாவை ஒட்டி நடைபெற்று வரும் அணிவகுப்பு நிகழ்ச்சியில் மேகன் ஹரியுடன் சேர்ந்து கலந்துகொண்டார்.
இதனை பார்த்த ரசிகர்கள் அனைவரும் உற்சாகமடைந்தனர். ஆனால் குட்டி இளவரசர் ஆர்ச்சி அங்கு வராதது ரசிகர்களுக்கு சிறிது ஏமாற்றத்தையே கொடுத்துள்ளது.