இந்தியா ஆஸ்திரேலியா அணி இடையேயான மிக முக்கியமான போட்டி நடைபெற உள்ளது. இப்போட்டிக்காக இரு அணி வீரர்களும், தீவிர வலைப்பயிற்சியில் ஈடுபட்டிருந்தனர். ஆஸ்திரேலிய அணி பேட்ஸ்மேன்கள் தீவிர வலைப்பயிற்சியில் ஈடுபட்டனர்.
அப்போது அவர்களுக்கு பந்துவீச ஜெய்கிஷன் பிளாஹா என்ற வீரர் வந்துள்ளார். அவர் வீசிய பந்தை ஆஸ்திரேலிய அணியின் தொடக்க ஆட்டக்காரர் வார்னர் பலம் கொண்டு அடிக்க, நேராக சென்ற பந்து பவுலர் தலையை தாக்கியது. வலி தாங்க முடியாத பவுலர் கீழே சாய, பதற்றம் தொற்றிக்கொண்டது. உடனடியாக, வார்னர் உள்ளிட்ட ஆஸ்திரேலிய வீரர்கள் அனைவரும் கவலை சேர்ந்த முகத்துடன் அவருக்கு அருகில் வந்து முதலுதவி செய்தனர்.
இதனையடுத்து உடனடியாக ஸ்ட்ரெச்சரில் காயம்பட்ட பவுலர் ஜெய்கிஷன் பிளாஹா தூக்கி செல்லப்பட்டார். அவருக்கு மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டது. அப்போது ஏற்பட்ட காயம் பெரிய அளவில் பாதிப்பை உண்டாக்கவில்லை எனவும், கண்விழித்த அவர் புன்னகைத்ததாகவும் தகவல்கள் கிடைத்துள்ளது.
இதனையடுத்து கவலையில் நிறுத்தப்பட்ட வலைப்பயிற்சி மீண்டும் தொடங்கியது. அதே நேரம் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பவுலர் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டுள்ளார். தலையில் பட்ட காயம் என்பதால் அவருக்கு சிகிச்சை அளிக்க முடிவு செய்யப்பட்டது. பவுலர் சரிந்த நேரத்தில், வார்னர் உள்ளிட்ட அனைத்து ஆஸ்திரேலிய வீரர்களும் பதறிப்போய்விட்டார்கள்.