அமெரிக்காவை சேர்ந்த நடிகையும், கோடீஸ்வரியுமான டேப்னி ஜுனிகா திடீரென திருமணம் செய்து கொண்டுள்ளார்.
டேப்னி ஜுனிகாவின் சொத்து மதிப்பு $3 மில்லியனுக்கு மேல் இருக்கும் என கணக்கிடப்பட்டுள்ளது.
56 வயதான அவர் இதுநாள் வரை திருமணமே செய்து கொள்ளாமல் வாழ்ந்து வந்தார். ஆனால் பல ஆண்டுகளாக டேவிட் மெலிக்சோ என்ற நபருடன் நெருங்கிய நட்பில் டேப்னி இருந்தார்.
இந்நிலையில் திடீரென சில தினங்களுக்கு முன்னர் டேவிட்டை டேப்னி திருமணம் செய்து கொண்டுள்ளார்.
இந்த திருமணத்தில் இருவரின் நெருங்கிய நண்பர்கள், உறவினர்கள் என மொத்தம் 30 பேர் மட்டுமே கலந்து கொண்டனர்.
டேப்னிக்கு இது முதல் திருமணம் என்ற நிலையில் டேவிட்டுக்கு இரண்டாம் திருமணம் என்பது குறிப்பிடத்தக்கது.