உறங்கிக் கொண்டிருந்தவரிற்கு நேர்ந்த கதி!

வீட்டு வாசலில் படுத்திருந்த நபரை யானை மிதித்துக் கொன்றுள்ளது.

இந்தச் சம்பவம் பொலனறுவை திம்புலாகல, அலவாகும்புர கிராமத்தில் இன்று அதிகாலை நடந்துள்ளது.

அலவாகும்புர பகுதியைச் சேர்ந்த 51 வயதுடைய நபர் ஒருவரே சம்பவத்தில் உயிரிழந்துள்ளார்.

தனது உறவினரின் வீட்டுக்குச் சென்று மீண்டும் வீடு திரும்பிய பின்னர் அவர் வாசலில் உறக்கத்தில் இருந்துள்ளார்.

இதன் போது யானை அவரை மிதித்துக் கொன்றுள்ளது.

அரலகங்விலப் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.