நடிகை ஸ்ரேயா ரஜினி, தனுஷ், ஜெயம் ரவி என பல நடிகர்களுடன் தமிழ் படங்களில் நடித்தவர். ரஷ்யாவை சேர்ந்த தன் நண்பரை காதலித்து திருமணம் செய்துகொண்டார். நீண்ட நாட்களுக்கு பின் சிம்புவுடன் நடித்த AAA படமும் தோல்வியானது.
திருமணத்திற்கும் பின்னும் நடிக்க தயாராக இருப்பதாக கிளாமர் புகைப்படங்கள் மூலம் தூது அனுப்பினார். தற்போது தெலுங்கில் அதிகமான படங்களில் நடித்து வருகிறார்.
சந்திரசேகர் ஏலட்டி என்ற இயக்குனரின் படத்தில் 8 வயது குழந்தைக்கு அம்மாவாக நடிக்க போகிறாராம். 37 வயதாகும் ஸ்ரேயா கோபாலா கோபாலா, கௌதமபுத்திர சட்டகர்ணி படங்களில் அம்மவாக நடித்துள்ளார். மேலும் கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் நண்டாமுரி பாலகிருஷ்ணா படத்திலும் அவர் நடிக்கவுள்ளாராம்.