முஸ்லீம் கணவரால் 24 முறை கத்தியால் குத்தப்பட்ட பிரித்தானியா பெண் தற்போது முதன்முறையாக தனக்கு நடந்து கொடூரம் குறித்து மனம் திறந்து பேசியுள்ளார்.
பிரித்தானியாவை சேர்ந்த நடாலி குய்ரோஸ் (43) என்கிற தாய்க்கு இரண்டு பெண் குழந்தைகள் இருந்தனர். கணவருடன் இல்லாமல் தனியாக வாழ்ந்து வந்த நடாலியிடம், பள்ளி காலத்திலிருந்தே நண்பனாக இருந்த பாபர் கரமத் ராஜா நெருங்கி பழக ஆரம்பித்துள்ளார்.
பின்னர் ஒருநாள் நடாலியை காதலிப்பதாக கூறியவர், நான் தந்தையாக வேண்டும் என ஆசையை வெளிப்படுத்தியுள்ளார்.
அதனை ஏற்றுக்கொண்ட நடாலி சில தினங்களில் கர்பமடைந்துள்ளார். ஆனால் தீவிர இஸ்லாம் மதத்தவரான ராஜாவின் தாய், நடாலியுடன் தன்னுடைய மகனுக்கு இருக்கும் உறவை அதிகம் வெறுத்துள்ளார்.
எப்படியும் தன்னுடைய தாய் நடாலியுடன் சேர்ந்து வாழ ஒப்புக்கொள்ள மாட்டார் என்பதால், அவருடைய வயிற்றில் வளரும் தன்னுடைய குழந்தையை அழிக்க முடிவு செய்துள்ளார்.
2016ம் ஆண்டு நடாலியாவை சந்திக்க வேண்டும் எனக்கூறி அழைத்துள்ளார். அந்த இடத்தை நோக்கி சென்றுகொண்டிருந்த போது, முகத்தை நன்கு மூடியிருந்த மர்ம நபர், நீளமான கத்தியால் நடாலியை கொடூரமாக தாக்க ஆரம்பித்துள்ளார்.
கதறல் சத்தம் கேட்டு அப்பகுதி வழியாக சென்றுகொண்டிருந்த சிலர், வேகமாக ஓடி வந்து தடுக்க முயன்றனர். ஆனால் அவர்களை தள்ளிக்கொண்டு வந்த மர்ம நபர், நடாலியின் மார்பகம், மணிக்கட்டு, கழுத்து மற்றும் வயிற்றுப்பகுதியில் என 24 முறை கத்தியால் குத்திவிட்டு தப்பியுள்ளான்.
பின்னர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நடாலியா தீவிர சிகிச்சைக்கு பின் கண்விழித்ததும், ராஜா வரவில்லையா என பொலிஸாரிடம் கேட்டுள்ளார்.
உடனே அந்த பொலிஸார், தாக்குதல் நடத்தியதே உங்களுடைய காதலன் ராஜா தான் என கூறியுள்ளார். இதனை கேட்டதும் நடாலியா அதிர்ச்சியடைந்துள்ளார். அடுத்த சில தினங்களில் அவருக்கு மருத்துவமனையில் அழகிய பெண் குழந்தை பிறந்தது.
இந்த சம்பவம் தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த போது, இன்னும் 2மீ ஆழத்தில் கத்தி பாய்ந்திருந்தால் வயிற்றில் இருந்த குழந்தை இறந்திருக்கலாம் என மருத்துவ அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது.
அதனை கேட்டறிந்த நீதிபதி, குற்றவாளிக்கு 18 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளித்தார்.
இந்த நிலையில் தனக்கு நடந்த துயரமான சம்பவவம் குறித்து நடாலி கூறுகையில், அந்த சம்பவத்தால் என் உலகம் வீழ்ந்தது. நான் முற்றிலும் உடைந்து போயிருந்தேன். ஆனால் என் மகள்களுக்காக நான் தொடர்ந்து வாழ வேண்டியிருந்தது.
இரண்டு வாரங்கள் கழித்து நான் மருத்துவமனையில் இருந்து வெளியேறினேன். அப்போது அங்கிருந்த மருத்துவர்கள், நான் பிழைப்பேன் என நினைத்துக்கூட பார்க்கவில்லை என்று அவர்கள் என்னிடம் கூறினார்கள்.
பள்ளி பருவத்தில் இருந்தே ராஜா எனக்கு நண்பனாக இருந்தான். 25 வருடங்களாக பேஸ்புக்கில் நட்பினை தொடர்ந்து வந்தோம்.
நேரில் பழகிய இரண்டு வாரத்தில் எங்களுள் காதல் மலர்ந்தது. ராஜாவின் தாய் ஏற்பாடு செய்யப்பட்ட திருமணத்தையே விரும்பினார். அவர் தீவிர இஸ்லாம் மதத்தவர் என்பதால், என்னை எப்படி ஏற்றுக்கொள்வார் என்கிற பயம் எனக்கு இருந்தது. அதே பயம் ராஜாவிற்கு இருந்தது.
நான் முழுமையாக குணமடைந்ததும், சிறைக்கு சென்று ராஜாவை சந்தித்தேன். ஆனால் அவர் எந்த குற்ற உணர்ச்சியும் இல்லாமல், சாதாரணமாக என்னிடம் மன்னித்துவிடுமாறு கூறினார். நான் ஒரு தைரியமான பெண் என்றும் புகழ்ந்ததாக தெரிவித்துள்ளார்.