இலங்கையில் மீண்டும் ஒரு முஸ்லிம் பிரபாகரன் உருவாகிவிடுவார் எனவே மக்கள் எச்ரிக்கையுடன் இருக்க வேண்டும் என அந்நாட்டு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனா எச்சரித்துள்ளார்.
முல்லைத்தீவு பகுதிக்கு சென்ற ஜனாதிபதி சிறிசேனா நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:நாடு தற்போது பிரிந்து இருப்பது உண்மை தான். இதனை ஏற்றுக் கொள்ளதான் வேண்டும். ஆனால் இது நாட்டுக்கு நல்லதல்ல.
அனைத்து சமூக மக்களிடமும் ஒற்றுமையை ஏற்படுத்த வேண்டிய தேவை தற்போதுள்ளது. மீண்டும் ஒரு முஸ்லிம் பிரபாகரன் பிறப்பதற்கு மக்கள் அனுமதித்து விடக்கூடாது.இது நாட்டுக்கு நல்லதல்ல. நாம் பிரிந்து நின்றால் ஒட்டுமொத்த நாட்டுக்கும் இழப்பு தான். இதில் எந்த மாற்றமும் இல்லை.
நாட்டை பற்றி கவலைப்படாமல் சில அரசியல்வாதிகள் வரவுள்ள தேர்தலை மனதில் கொண்டு செயல்படுகின்றனர். மக்கள் அவர்களின் ஆசைகளுக்கு இரையாக வேண்டாம் என கூறியுள்ளார்.